சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடு வெட்டியவர் கைது: திருப்பூரில் பரபரப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 மாடு வெட்டியவர் கைது: திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்:திருப்பூரில், மாட்டை வெட்டிய நபர்களை, இந்து முன்னணியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாடு வெட்டியது தொடர்பாக, இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், மங்கலம் ரோடு, கோழிப்பண்ணை, பாலுசாமி என்பவரது தோட்டத்தில் சிலர் மாடு வெட்டி வருவதாக இந்து முன்னணியினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. மாவட்ட பொது செயலாளர் செந்தில்குமார் உட்பட தொண்டர்கள், அப்பகுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ட்ரல் போலீசார் இருதரப்பினரிடம் பேச்சு நடத்தி அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். கோர்ட் உத்தரவை மீறி, மாடு வெட்டப்பட்டது தொடர்பாக, திருப்பூரை சேர்ந்த அன்சார், 31, கேரளா மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த ஜாசர், 41 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X