பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு அவகாசம் நிறைவு ஆர்வம் காட்டாத விவசாயிகள்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசம் முடிந்த நிலையில், விவசாயிகள் ஆர்வம் காட்டாததால், காப்பீட்டு நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இயற்கை சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் பயிர் பாதிக்கப்படும் போது, விவசாயிகளுக்கு உரிய இழப்பை வழங்குவதாக, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில், இந்த திட்டத்தை செயல்படுத்த, மூன்று காப்பீட்டு நிறுவனங்களை மத்திய அரசு நியமித்துள்ளது.பயர் கடன் பெற்ற விவசாயிகள் கட்டாயத்தின் அடிப்படையிலும், கடன் பெறாத விவசாயிகள், விருப்பத்தின் அடிப்படையிலும், பயிர் காப்பீடு செய்து வந்தனர். இந்நிலையில், பயிர் கடன் பெற்ற விவசாயிகள், விருப்பத்தின் அடிப்படையில் காப்பீடு செய்தால் போதும் என, மத்திய அரசு அறிவித்தது.பயிர் வகைகளுக்கு ஏற்ப, மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, நெல், மக்காச்சோளம், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைப்பருப்பு, நிலக்கடலை, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களுக்கு, ஜூலை, 31க்குள் காப்பீடு செய்ய வேண்டும் என, காலக்கெடு நிர்ணயித்து இருந்தனர்.

நேற்று முன்தினம் பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு முடிந்தது. வேளாண் துறை மற்றும் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் எதிர்பார்த்தப்படி, பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. பயிர் கடன் பெற்ற விவசாயிகள், விருப்பத்தின் அடிப்படையில், பயிர் காப்பீடு செய்யலாம் என்பதே இதற்கு காரணம். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், காப்பீட்டு நிறுவனங்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X