சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் இருந்தும் ஆடிப்பெருக்கிற்கு திறக்காததால் பொதுமக்கள் அதிருப்தி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

காட்டுமன்னார்கோவில் : கீழணையில் போதிய தண்ணீர் இருந்து ஆடிப்பெருக்கு திருநாள் கொண்டாட்டத்திற்கு பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா விமர்சையாக நடக்கும். இந்த ஆண்டு இன்று (2ம் தேதி) கொண்டாடப்படுகிறது. காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் டெல்டா பகுதிக்கு காவிரி தண்ணீர் அணைக்கரை கீழணையில் இருந்து திறக்கப்படும். இந்த ஆண்டு கீழணைக்கு கடந்த 22ம் தேதி முதல் தண்ணீர் வரத்து உள்ளது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்காக வடவாற்றில் மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மற்ற பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கவில்லை.தண்ணீர் திறப்பு குறித்து, கடந்த வாரம் நடந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்ற சங்க தலைவர்களும், ஆடிப்பெருக்கிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வற்புறுத்தவில்லை. பிரதான வாய்க்கால்களில் துார்வாரும் பணிகள் நடப்பதால், ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும் என கூறியதற்கு மறுப்பு சொல்லாமல் வந்தது வேதனையளிக்கிறது என விவசாயிகள் புலம்புகின்றனர்.

சில ஆண்டுகளாக கீழணையில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கிற்கு பாசன வாய்க் கால்களில் தண்ணீர் திறக்கவில்லை. இந்த ஆண்டு போதிய தண்ணீர் இருந்தும் திறந்து விடாததால் விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X