சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் விற்பதாக ரூ.1.50 லட்சம் மோசடி: எஸ்.பி.,யிடம் பெண் புகார் மனு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கோவை:கார் விற்பதாக ரூ.1.5 லட்சம் பணம் மோசடி செய்த நபர் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, எஸ்.பி.,யிடம் பெண் புகார் அளித்தார்.கோவை சோமையனூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி -கவிதா, எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தனியார் வாகன விற்பனை இணையதளத்தில், கார் விற்பனை குறித்த விளம்பரத்தை பார்த்தோம். அதிலிருந்த ஒரு எண்ணை தொடர்பு கொண்ட போது, வாட்ஸ் அப் வாயிலாக மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்ட போது, காரின் உரிமையாளர் என்று கூறிக்கொண்ட நபர், ராணுவத்தில் பணிபுரிவதாகவும், பெங்களூருவில் உள்ளதால் காரை விற்பனை செய்வதாகவும் கூறினார். காரின் விலை இரண்டு லட்சம் ரூபாய் எனக் கூறினார். தான் ராணுவத்தில் பணி புரிவதற்கான ஆதாரங்களையும் அனுப்பினார்.ஆன்லைன் வாயிலாக, தவணை முறையில் ரூ.1.50 லட்சத்தை அந்த நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பினோம். மீதித்தொகை ரூ.50 ஆயிரத்தை செலுத்தினால், காரை ஒப்படைப்பதாக கூறிய அவர், காரையும் வழங்காமல், வாங்கிய பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.ராணுவ வீரர் உடையில், அனுப்பிய புகைப்படங்களில், அவரது பெயர் தினேஷ்குமார் என உள்ளது. அவர் ராணுவத்தில் பணியாற்றுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X