கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்துக்கு மட்டும் 127 விமானங்கள் உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை, தமிழகம் அழைத்து வர, வரும், 5ம் தேதி முதல், 31ம் தேதி வரை, 127 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது

.வெளிநாடுகளில் சிக்கிய அனைவரையும், படிப்படியாக அழைத்து வர, விமானங்கள் இயக்குவதற்கு, மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.தி.மு.க., செய்தி தொடர்பாளர், டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், 'வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை, இங்கே அழைத்து வர வேண்டியது அரசின் கடமை. 'சர்வதேச விமானங்கள், தமிழக விமான நிலையங்களில் தரையிறங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தரை இறங்க அனுமதிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுஉள்ளது.இம்மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் ஆஜராகி, 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு இயக்கப்படும் விமானங்களின் அட்டவணையை தாக்கல் செய்தார்.அட்டவணையில், 'வரும், 5 முதல், 31ம் தேதி வரை, தமிழகத்துக்கு, 127 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை, படிப்படியாக இங்கு அழைத்து வர, அரசு உறுதி பூண்டுள்ளது.'அதற்காக, முடிந்த வரை விமானங்களை இயக்குவதற்கு, உத்தரவாதம் அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உணவு, பயணம், தங்குமிடம் ஆகியவற்றுக்கான செலவுக்கு, இந்திய சமூக நல நிதியை பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, மத்திய அரசு அளித்த உத்தர வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்கள், இந்திய சமூக நல நிதியத்தில் இருந்து, நிதி கேட்டு விண்ணப்பித்தால், அதை இந்திய துாதரகம் பரிசீலிக்கும்படி கூறினர். மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை பின்பற்றவில்லை என்றால், நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்றும், நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X