பொது செய்தி

தமிழ்நாடு

பீஸ் வாங்காமலே பாம்புகளை காப்பாற்றுகிறார்

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 பீஸ் வாங்காமலே பாம்புகளை காப்பாற்றுகிறார்

கொரோனா காலத்தில், பலரும் பலவிதமான சேவைகளை செய்து வருகின்றனர். அதில், வக்கீல் ஒருவர், குடியிருப்புகளுக்குள் படையெடுக்கும் பாம்புகளை பிடித்து, உயிர்களை காப்பாற்றி வருகிறார்.கொரோனா பரவல் காரணமாக, மக்கள் வீடுகளில் முடங்குவதால் சாலைகளில் வாகன நடமாட்டம் குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்பகுதிகளில் மாலை நேரங்களில், எந்த வாகனங்களின் சப்தமும் இல்லாததால், பாம்புகள் வெளியேறுவது அதிகரித்துள்ளது.இந்நிலையில், ஆலாந்துறையை சேர்ந்த வக்கீல் விஜயகுமார், 34, என்பவர், குடியிருப்புகளுக்குள் புகும் பாம்புகளை பிடித்து, வனத்தில் விடுவதை சேவையாக செய்து வருகிறார். அவர் நம்மிடம், ''நாட்டில், 560 வகையான பாம்பு இனங்கள் இருந்தன. அவை, மெல்ல அழிந்து வருகின்றன. பாம்புகள் மீதான ஆர்வத்தால், ஆறு மாதங்களுக்கு முன்பு, பாம்பு பிடிப்பதை கற்றுக் கொண்டேன்.தற்போது, ஊரடங்கு காரணமாக, மக்கள் நடமாட்டம் இல்லாததால், பாம்புகள் வெளியே வருகின்றன. சிலர் பாம்பை பார்த்தவுடன், அடித்துக்கொன்று விடுகின்றனர். தகவல் வரும் பட்சத்தில், விரைந்து சென்று அவற்றை பத்திரமாக பிடித்து, வனத்துறை ஒத்துழைப்புடன் வனத்தில் விடுவிக்கிறேன்,'' என்கிறார்.கடந்த, நான்கு மாதங்களில் ஆலாந்துறை, வடிவேலாம்பாளையம், செம்மேடு உள்ளிட்ட கிராமங்களில் கண்ணாடி விரியன், கட்டுவிரியன், ஓநாய் முகப்பாம்பு, கொம்பேரி மூக்கன், நாகப்பாம்பு என, 300க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளதாக கூறுகிறார் இவர்.''இதை, ஒரு சேவையாகவே செய்து வருகிறேன். பாம்புகள் விவசாயிகளின் நண்பன்; அவை, காப்பாற்றப்பட வேண்டும். ஊரடங்கு முடிந்தாலும், உயிர்களை காக்கும் சேவை தொடரும்,'' என்கிறார் விஜயகுமார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X