அவசியம்! வில்லியனூர் புறவழிச்சாலையில் ஆபத்தான பள்ளங்கள் ... கடந்து செல்வோரும் எச்சரிக்கையாக இருப்பது| Dinamalar

இந்தியா

அவசியம்! வில்லியனூர் புறவழிச்சாலையில் ஆபத்தான பள்ளங்கள் ... கடந்து செல்வோரும் எச்சரிக்கையாக இருப்பது

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
அவசியம்! வில்லியனூர் புறவழிச்சாலையில் ஆபத்தான பள்ளங்கள் ... கடந்து செல்வோரும் எச்சரிக்கையாக இருப்பது

புதுச்சேரி : வில்லியனுார் புறவழிச் சாலையோரம் உள்ள ஆபத்தான பள்ளத்தால் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது.

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனுார் நகருக்கு மேற்கே 1 கி.மீ., நீளத்திற்கு புறவழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் இடது பக்கம் இரும்ப தடுப்பு உள்ளது. சாலையோரம் உள்ள குடியிருப்பு வாசிகள் பயன்படுத்தும் வகையில் இந்த இரும்புத் தொடரில் 3 மீட்டர் அகலத்திற்கு தடுப்பு இன்றி இடைவெளி உள்ளது. இதன் வழியே பொதுமக்கள் பாதசாரியாகவும், இருசக்கர வாகனங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.போக்குவரத்து சாலையையொட்டிய இப்பகுதி யில் மழைக்காலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு மெகா பள்ளமாக மாறியுள்ளது.

போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட்டு சாலையோரம் ஒதுங்கினால் பள்ளத்தில் சிக்கி உயிர் பலியாகும் அபாயம் உள்ளது. இப்பகுதியை தேசிய நெடுஞ்சாலை துறையினர் பார்வையிட்டு, ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X