பொது செய்தி

தமிழ்நாடு

சிலைகளுக்கு மாலை அணிவிக்க நெறிமுறைகள்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; தலைவர்களின் சிலைகளுக்கு, மாலை அணிவித்தல் மற்றும் மலர் துாவுதல் தொடர்பாக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா நோய் பரவாமல் இருக்க, அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் அறிவித்துள்ளது.தற்போது, தலைவர்களின் சிலைகளுக்கு, மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்ட கலெக்டர் மட்டும், உரிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து, மாலை அணிவிக்க, அவ்வப்போது அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களிலும், தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்வது தொடர்பாக, புதிய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.அதன் விபரம்: அரசு அறிவித்த, வழிமுறைகளை பின்பற்றி, உரிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து, அமைச்சர்களும், எம்.பி.,- - எம்.எல்.ஏ.,க்களும், மாவட்ட கலெக்டருடன் சென்று, மாலை அணிவித்து, மரியாதை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது

மரியாதை செய்யப்படும் தலைவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஐந்து பேருக்கு மிகாமல்; அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த, பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள், ஐந்து பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம் இதற்கு, மாவட்ட கலெக்டரிடம், முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான அனுமதி பெற்று, அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, மாலை அணிவித்து, மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X