இந்தியா

பணி ஓய்வு பாராட்டு விழா

Added : ஆக 02, 2020
Share
Advertisement

புதுச்சேரி : அரியாங்குப்பம் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையத்தில் பெண் சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றிய தேன்மொழிக்கு, பணி ஓய்வு பாராட்டு விழா நேற்று நடந்தது.

மருந்தாளுநர் பாண்டியன் வரவேற்றார். மருத்துவர்கள் தமிழ்ச்செல்வன், அல்லி முன்னிலை வகித்தனர். மருத்துவ அதிகாரி தாரணி தலைமை தாங்கி, பணி ஓய்வு பெற்ற தேன்மொழியின் மருத்துவ சேவையை பாராட்டி பேசினார்.செவிலிய அதிகாரி ஜெயப்பிரதா, சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், கிராமப்புற செவிலியர் கோவிந்தம்மாள், கருமாரி, கோதைநாயகி, சுகாதார உதவியாளர்கள் கரிகாலன், ஜெயஸ்ரீ, சுகாதாரப் பணியா ளர் வெங்கடேசன் மற்றும் ஆஷா வந்தியா தேவி உட்பட பலர் பாராட்டிப் பேசினர்.

பணி ஓய்வு பெற்ற தேன்மொழி ஏற்புரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை சுகாதார உதவியாளர் ஜெகநாதன், மருந்தாளுநர் பாண்டியன், ஓட்டுநர் சுப்ரமணி மற்றும் ஆஷா பணியாளர்கள் செய்திருந்தனர்.சுகாதார உதவியாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X