பொது செய்தி

தமிழ்நாடு

பூலோகநாதர் கோவிலில் சனிப்பிரதோஷ பூஜைகள்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

சிவன் கோவில்களில் மாதந்தோறும் இரண்டு முறை பிரதோஷ பூஜைகள் நடக்கும். ஆகஸ்ட் மாதத்தில் 1,16,30 தேதிகளில் மூன்று பிரதோஷம் வருவது சிறப்பாகும். நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார். பூஜைகளை குமார், ஹரி பிரபு குருக்கள் செய்தனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்கள் இல்லாமல் கோவில் ஊழியர்களை மட்டும் கொண்டு பூஜைகள் நடந்தன.

அதே போல் கைலாசநாதர், திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர், திருமானிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X