பொது செய்தி

தமிழ்நாடு

28 லட்சம் டன் நெல் வாணிப கழகம் கொள்முதல்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், விவசாயிகளிடம் இருந்து, நடப்பு சீசனில், முதல் முறையாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கான, 28 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து, சாதனை படைத்துள்ளது.

சென்னை, நீலகிரி தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் நெல் விளைகிறது. விவசாயிகளிடம் இருந்து, பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், நெல் கொள்முதல் செய்கிறது.அந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. வாணிபக் கழகம், 2011 -- 12 சீசனில், 23.87 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதே, இதற்கு முன் சாதனை அளவாக இருந்தது. தமிழகத்தில், 2019 அக்டோபர், 1ல் துவங்கிய நெல் கொள்முதல் சீசன், அடுத்த மாதம் முடிகிறது. இந்த சீசனில், நெல் கொள்முதல் செய்வதற்காக, விவசாயிகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் சார்பில், 100 கிலோ எடை உடைய, குவிண்டால் சாதாரண நெல்லுக்கு, 1,865 ரூபாயும்; உயர்தர நெல்லுக்கு, 1,905 ரூபாயும், குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்படுகிறது.

நடப்பு சீசனில், 28 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய, வாணிபக் கழகம் இலக்கு நிர்ணயித்ததில், நேற்று முன்தினம் வரை, அதை விட, அதிக அளவாக, 28.10 லட்சம் டன் நெல் பெற்றுள்ளது. இதற்காக, 4.66 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில், 5,400 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தற்போது, 453 நேரடி நிலையங்கள் வாயிலாக, தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X