சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டும் குழியுமான சாலை பாஷியம் தெருவில் அவதி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் பாஷியம் ரெட்டி தெரு சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடலுார் மஞ்சக்குப்பம் பாஷியம் ரெட்டி தெரு வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. வாகனங்கள் செல்லும் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை தரமாக அமைக்கவில்லை. இதனால், சாலையில் ஆங்காங்கே ஜல்லி பெயர்ந்து சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.மழைக் காலத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் ஓட்டுனர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். நகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர்.

இதனால், ஜல்லி பெயருவது நாளுக்கு நாள் அதிகரித்து மெகா சைசில் பள்ளம் ஏற்படுகிறது. எனவே, சாலையை தரமான முறையில் சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X