வாகன விற்பனையகங்களில் புகை சோதனை மையம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வாகன விற்பனையகங்களில் புகை சோதனை மையம்

Added : ஆக 02, 2020
Share

சென்னை; தமிழகத்தில் உள்ள வாகன விற்பனையகங்களில், புகை சோதனை மையங்களை அமைக்கும்படி, போக்குவரத்து கமிஷனர், ஜவஹர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், 2.5 கோடி வாகனங்கள் உள்ளன. அவற்றின் புகையை சோதனை செய்ய, 367 புகை சோதனை மையங்கள் மட்டுமே உள்ளன. இவற்றின் வழியாக, வாகனங்களுக்கு முறையாக, புகை சோதனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், காற்று மாசை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது.

இது குறித்து, கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப, புகை சோதனை மையங்களை அமைக்க உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள, நான்கு சக்கர வாகன விற்பனையகங்கள் மற்றும் இரு சக்கர வாகன விற்பனையகங்கள் மற்றும் அவற்றின் பழுது நீக்க மையங்களில், புகை சோதனை கருவிகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா ஊரடங்கால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அனைத்து வாகன விற்பனையகங்களிலும், விரைவில், புகை சோதனை மையங்களை அமைக்கும்படி, போக்குவரத்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அமைக்கப்பட்ட மையங்களின் தரத்தை ஆராய வேண்டும்.அவற்றை, 'வாகன்' மென்பொருளுடன் இணைத்து, புகை சோதனை முடிவுகளை, நேரடியாக, மத்திய தகவல் மையத்தில் சேமிக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கும்படி, வட்டார போக்குவரத்து அதிகாரிகளான, ஆர்.டி.ஓ.,க்களுக்கு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X