பொது செய்தி

தமிழ்நாடு

துாத்துக்குடி, தர்மபுரியில் அமையுது பிரமாண்ட துணை மின் நிலையம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; துாத்துக்குடி மற்றும் தர்மபுரியில், தலா ஒரு பிரமாண்ட துணை மின் நிலையம் அமைக்க, மத்திய அரசின், 'பவர்கிரிட்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வேலுார் மாவட்டம், திருவலவத்தில், பவர்கிரிட் நிறுவனத்திற்கு, 765 கி.வோ., திறனில் துணை மின் நிலையம் உள்ளது. இதுவே, தமிழகத்தில், அதிக திறன் உடைய துணை மின் நிலையம்.அந்நிறுவனத்திற்கு, துாத்துக்குடி, தர்மபுரியில், 400 கி.வோ., திறனில் துணை மின் நிலையங்கள் உள்ளன. அவை இரண்டும், 765 கி.வோ., திறனுடைய மின் வழித்தடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

வட மாநிலங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மஹாராஷ்டிரா, கோல்ஹாபூர்.கர்நாடகாவில் உள்ள குடுகி, மதுகிரி வழியாக, 765 கி.வோ., வழித்தடத்தில், தர்மபுரியில் உள்ள, துணை மின் நிலையத்திற்கு எடுத்து வர, பவர்கிரிட் நிறுவனம் வசதி செய்துள்ளது.தர்மபுரியில் இருந்து, அந்த மின்சாரத்தை, துாத்துக்குடி துணை மின் நிலையத்திற்கு அனுப்பலாம். தென் மாவட்டங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, துாத்துக்குடி துணைமின் நிலையத்தில் இருந்து, தர்மபுரி வழித்தடம் வாயிலாக, தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கும் எடுத்து செல்லலாம்.தற்போது, துாத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு மின்சாரம் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், துாத்துக்குடி மற்றும் தர்மபுரியில் உள்ள, 400 கி.வோ., திறனுள்ள துணை மின் நிலையங்களுக்கு அருகில், தலா, ஒரு, 765 கி.வோ., திறனில், பிரமாண்ட துணைமின் நிலையம் அமைக்க, பவர்கிரிட் முடிவு செய்துள்ளது. இதனால், மதுகிரியில் இருந்து, ஏற்கனவே திட்டமிட்டதை விட, அதிக மின்சாரத்தை தர்மபுரிக்கு எடுத்து வந்து, தமிழகத்தின் பல பகுதிகளுக்கு வினியோகம் செய்யலாம்.தென் மாவட்டங்களில் உற்பத்தியாகும் காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தில், தமிழக மின் வாரியம் கொள்முதல் செய்தது போக உபரியை, பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்ல முடியும்.இதனால், உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுதுமாக பயன்படுத்த முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X