பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் தனியார் மருத்துவமனை அனுமதி ரத்து

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுத லாக வசூலித்த, தனியார் மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கைகள்

இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கொரோனா தொற்று காலத்தில், அனைவரும் பயன் பெறும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகள், அரசுடன் இணைந்து, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சிகிச்சை தொடர்பான உரிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டி நடைமுறைகள், அவ்வப்போது வழங்கப்படுகின்றன.சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, 'பிவெல்' மருத்துவமனையில் ஆய்வு செய்ததில், நோயாளி ஒருவருக்கு, 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு, 12.20 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்ட விபரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், சிகிச்சை நெறிமுறைகளின்படி, கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை.உறுதிகூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த மருத்துவமனைக்கு, கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அனுமதி, தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

கொரோனா சிகிச்சை வழங்கும் தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விபரம் தெளிவாக, பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.தனியார் மருத்துவமனைகள், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X