பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணிக்கு தொகுதி மேம்பாட்டு நிதி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; 'எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில், 25 லட்சம் ரூபாயை, கொரோனா தடுப்பு பணிக்கு ஒதுக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியாக, ஆண்டுக்கு, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டு, எம்.எல்.ஏ., நிதியில், தலா, 1 கோடி ரூபாய் வீதம், 235 கோடி ரூபாய் பிடித்தம் செய்து, கொரோனா தடுப்பு பணிக்காக, சுகாதார துறைக்கு வழங்கப்பட்டது.

மீதமுள்ள நிதி, தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிதியில், 1 கோடி ரூபாயை, வரையறுக்கப்பட்ட பணிகளுக்கு, எம்.எல்.ஏ.,க்கள் ஒதுக்க வேண்டும். மீதி, 1 கோடி ரூபாயை, அவர்கள் விருப்ப அடிப்படையில், பணிகளை தேர்வு செய்யலாம். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட, 1 கோடி ரூபாயில், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், குடிநீர் திட்டப் பணிகளுக்காக, 50 லட்சம் ரூபாய் செலவிடலாம்.எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் விருப்பத்தின் அடிப்படையில், ஒன்று அல்லது அதற்கு மேலான பணிகளை தேர்வு செய்யலாம்.கொரோனா தடுப்பு பணிகளுக்கு, 25 லட்சம் ரூபாய் ஒதுக்க வேண்டும்.

இந்நிதியில், சுவாச கருவிகள், சுரமானிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆய்வக உபகரணங்கள், மருத்துவமனைகளுக்கு தேவையான படுக்கைகள், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கலாம். மீதி நிதியில், அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பழுது பார்க்க, சூரிய சக்தி தெரு விளக்குகள் அமைக்க, சரளை மற்றும் கப்பி சாலைகளை, தார் சாலைகளாக மேம்படுத்த ஒதுக்கலாம்.கிராம ஊராட்சிகளில், இடுகாடு, சுடுகாடு அமைத்தல், பாலங்கள்கட்டுதல், ரேஷன் கடை கட்டுதல் உட்பட, பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கலாம். தடை செய்யப்பட்ட பணிகளை தவிர, மற்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X