பொது செய்தி

தமிழ்நாடு

பக்ரீத் கொண்டாட்டம்: வீடுகளில் தொழுகை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் வீடுகளில் தொழுகை நடத்தினர்.

கொரோனா பரவலை தடுக்க ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.நேற்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் கிராமப்புற பள்ளி வாசல்களில் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகை நடந்தது. ராமநாதபுரம் நகர், பட்டிணம் காத்தான்,பனைக்குளம், சக்கரைகோட்டை, பெரியபட்டினம், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் வீடுகளில் தொழுகை நடத்தி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

கீழக்கரை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிவாசல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இறைத்துாதர் இப்ராகிம் (அலை) தியாகத்தை கொண்டாடும் வகையில்பக்ரீத் பண்டிகை நடந்தது.நேற்று காலை 8:00 மணிக்கு முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தொழுகையில் ஈடுபட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து உலக மக்கள் மீண்டு வர சிறப்பு துஆ ஒதப் பட்டது.பின் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை உறவினர்களுக்கும், இயலாதவர்களுக்கு வழங்கப் பட்டது. ஏழைகளுக்கு சக்காத் எனப்படும் சிறிய தொகை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X