பொது செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இல்லை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

திருப்புத்துார்:தமிழக தொழில் கல்வி இயக்குனரகம் அறிவித்துஉள்ள அரசு பாலிடெக்னிக்க ல்லுாரிகளுக்கான 3 ஆண்டு டிப்ளமோ படிப்பிற்கு 'ஆன் லைனில்' குறைவான மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர். 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாததால் மாணவர்கள் விண்ணப்பிக்கவில்லை.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை www.tngptc.in என்ற இணைய தளத்தில்மாணவர்கள் ஜூலை 24 முதல் விண்ணப்பித்து வருகின்றனர். ஆக.,4 ல் விண்ணப்பிக் கடைசி நாளாக உள்ள நிலையில் எதிர்பார்த்த விண்ணப்பங்கள் வரவில்லை.வழக்கமாக 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வந்த பின்னரே மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். இந்த ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் இல்லாமலேயே விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.

இருப்பினும் இதை அறியாமல் மாணவர்கள் பெரும்பாலானோர் விண்ணப்பிக்கவில்லை. இதனால் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட உள்ளது.இது குறித்து காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் முதல்வர் முகமது பாரூக் கூறுகையில், 'ஆன் லைன்' மூலம் மாணவர்கள் 15 கல்லுாரிகளுக்கு ஒரு விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க முடியும். மதிப்பெண் சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பிக்க முடியும்.

எளிதான இந்த விண்ணப்ப முறையை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கையும் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளி வர உள்ளது.' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X