பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
tamil nadu, lockdown, full, today,  தமிழகம், முழு ஊரடங்கு, இன்று

சென்னை; தமிழகம் முழுதும், இன்று (ஆக.2) தளர்வில்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, வரும், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, பல்வேறு தளர்வுகளையும், தமிழக அரசு அறிவித்து உள்ளது.எனினும், பொது மக்கள் கூடுவதை தடுக்க, இம்மாதம் அனைத்து ஞாயிற்றுக் கிழமையும், எவ்வித தளர்வுகளும் இல்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று மாநிலம் முழுதும், முழு அடைப்பு நடைபெறும். மருத்துவமனை, மருந்து கடைகள் தவிர, மற்ற கடைகள் எதுவும் திறக்கப்படாது; வாகனங்கள் இயங்காது.ரேஷன் கடைகள் முழு ஊரடங்கை முன்னிட்டு, இன்றும், அடுத்த வார ஞாயிற்றுக் கிழமையும், ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.தமிழகத்தில், ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை வேலை நாள். அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும். வைரஸ் தொற்றை தடுக்க, தமிழக அரசு, இம்மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.


latest tamil newsஇதையடுத்து, ரேஷன் கடைகளுக்கு, இன்றும், அடுத்த வார ஞாயிற்றுக் கிழமையும் விடுமுறை விடப்பட்டுள்ளது.கார்டுதாரர்கள், எந்த தேதியில் பொருட்கள் வாங்க வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கன்' அவர்களின் வீடுகளில் வழங்கும் பணியில், ரேஷன் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். நாளையும், நாளை மறுதினமும் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
02-ஆக-202009:07:53 IST Report Abuse
Appan முதல் தடவை லாக்டவுன் செய்ததது சரி.. ஏனென்றால் அப்போ கொரோனாவை பற்றி ஏதும் தெரியாது..அப்புறம் லாக்டவுன் செய்யும் பொது , அதன் பின் என்ன செய்ய போகிறோம் என்று சிந்திக்க வேண்டாமா..?. தமிழ் நாடு ஐந்தாவது முறை லெக்டவுன் செய்தது..ஆகஸ்ட் முடிந்து செப்டம்பர் வந்தால் என்ன செய்வார்கள்..?. என்ன முன்னேற்றம் இருக்கும்..? தடுப்புஊசி வரும் வரை யாரும் ஏதும் செய்ய முடியாது..தடுப்புஊசி வர ஓரிரு வருடம் ஆகலாம்..அல்லது தடுப்புஊசி வராமலே போகலாம்...அது நாள் வரை லாக்டவுன் செய்வார்களா?.பக்கத்து மாநிலம் கர்நாடக லாஃடவுன் போடாமல் விடுவித்து உள்ளது..இப்படி செய்தால் என்ன வேணும்../> நிறைய பேர் நோயால் தாக்க படுவார்கள்..அதனால் அதிகம் படுக்கைகள் ஆஸ்பத்திரியில் வைக்கணும்..அதை விட்டு எல்லோரையும் வீட்டுக்குள்ளே இருங்கள் என்றால் அன்றாடங்காய்ச்சிகள் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்...?. பொருளாதாரம் சிசிர்குலைந்து கொண்டு இருக்கிறது..எது முக்கியம்..?>? புத்தி இல்லாத அரசாங்கம்..வேறென்ன சொல்ல../>
Rate this:
Cancel
Bala Murugan - madurai,இந்தியா
02-ஆக-202009:02:48 IST Report Abuse
Bala Murugan மதுரையில் திருநகர் பகுதியில் மக்கள் வண்டிகளில் எப்பொழுதும் போதுதான் சென்று வருகிறார்கள்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
02-ஆக-202005:49:08 IST Report Abuse
g.s,rajan It is totally upsurd, People should protest against the Government and should throw away the inefficient Governance, the Government tortures the common man in many ways quoting Corona spread but it is unfair.It is very much to be concerned and condemnable.Every activities been affected and normal life is paralyzed and people are always in panic in nowadays, it is not a good sign.Economic crisis prevails for several months all over India is totally ridiculous. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X