இந்தியா

அன்பழகன் எம்.எல்.ஏ., யோசனை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

புதுச்சேரி : அரசிடம் மானிய உதவி பெற்று கட்டப்பட்டுள்ள ஓட்டல்களை அவசர கால மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும் என அன்பழகன் எம்.எல்.ஏ., ஆலோசனை கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:முதல்வர், கொரோனாவை எதிர்கொள்ள 10,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப் படும் என அறிவித்தார். உண்மையில் ஜிப்மர், இந்திரா காந்தி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கியுள்ள மொத்த படுக்கை எண்ணிக்கை 1,500க்கு மேல் இல்லை.மீதமுள்ள 8,500 படுக்கைகளுக்கு முதல்வர் என்ன கைவச திட்டத்தை வைத்துள்ளார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அரசால் பயன்படுத்தாமல் உள்ள கட்டடங்களை சீர்படுத்தி படுக்கை வசதிகள் செய்ய வேண்டும். அரசிடம் மானிய உதவி பெற்று கட்டப்பட்டுள்ள ஓட்டல்கள் மற்றும் தங் கும் விடுதிகளை அரசு அவசர மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும்.

ஏற்கனவே படுக்கை வசதிகள் உள்ள நிலையில் மருத்துவ உபகரணங்கள், உரிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை நியமனம் செய்து போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநிலத்தில் போதிய பரிசோதனை செய்யப்படாததால், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தரமாக கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பரிசோதனை முடிவை விரைவாக அறிய தேவையான கருவிகளை அதிகப்படுத்த வேண்டும்.கொரோனாவால் பாதித்த மக்களுக்கு, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளடக்கிய குழுவை கொண்டு உதவிகள் செய்திட வேண்டும்.

கவர்னரும், முதல்வரும் தங்களுக்குள் உள்ள 'ஈகோ'வை விட்டுவிட்டு, இருவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண நிதி மற்றும் உணவு பொருட்கள் வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X