சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கீழடி அகழாய்வு மழையால் தொடர்ந்து பாதிப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 கீழடி அகழாய்வு மழையால் தொடர்ந்து பாதிப்பு

திருப்புவனம்:கீழடியில் நடக்கும் அகழாய்வு பணி தொடர்ந்து மழையால் தடைபட்டு வருவதால் திட்டமிட்டபடி முடியுமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட நான்கு இடங்களில் 40 லட்ச ரூபாய் செலவில் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடியில்12 குழிகளும், அகரத்தில்ஒன்பது குழிகளும் கொந்தகை, மணலுாரில்தலா ஏழு குழிகளும் தோண்டப்பட்டு பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.பிப்ரவரியில் தொடங்கிய பணி செப்டம்பர் வரை நடைபெற உள்ள நிலையில் கொரானோ வைரஸ் காரணமாக இரு மாதங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

தற்போது மழை காரணமாக அகழாய்வு முழுமையாக நடைபெறவில்லை.அகழாய்வு தொடங்கி இதுவரை ஆறு மாதங்கள் கடந்த நிலையில் தமிழக தொல்லியல் துறை இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து எந்த விபரமும் அறிவிக்கவில்லை. கீழடியில் மழை மற்றும் கொரானோ பரவல் காரணமாக திட்டமிட்டபடி பணி முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X