இந்தியா

கார் மோதியதில் தொழிலாளி படுகாயம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

பாகூர் : சாலையை கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதி படுகாயமடைந்தார்.

தவளக்குப்பம், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்,65; கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதற்காக தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பை கடக்க முயன்றார்.அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்த பிஒய் 01 பிடி 7466 பதிவெண் கொண்ட மாருதி இகோ கார் மோதியது. அதில் படுகாயமடைந்த ராஜேந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X