சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாழை விவசாயிகளுக்கு இழப்பபீடு வழங்க வலியுறுத்தல்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கடலுார் : வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என கிழக்கு மாவட்ட தி.மு,க., செயலாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:குறிஞ்சிப்பாடி தொகுதி மற்றும் கடலுார் மாவட்ட பகுதிகளிலும் வாழை பயிரிடப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தில் அறுவடை துவங்கியுள்ளன. ஆனால் கொரோனா நோயால் ஊரடங்கு அறிவித்து எந்த செயல்பாடும் இல்லாமல் போனது.இதனால் ரூ. 400 முதல் ரூ. 500 வரை விற்ற வாழைத்தார் தற்போது ரூ.70 முதல் ரூ.100 வரை விற்கின்றன. வாழையை வாங்குவதற்கு வியாபாரிகள் வருவதில்லை. இதனால் வாழைத்தார் மரத்திலேயே பழுத்து வீணாகின்றன.

எனவே விவசாயிகளை காப்பாற்ற தேசிய கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்வதோடு, நஷ்ட ஈடாக ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X