இந்தியா

தேவாரத்தை இழிவுப்படுத்தியோர் மீது நடவடிக்கை

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 தேவாரத்தை இழிவுப்படுத்தியோர் மீது நடவடிக்கை

புதுச்சேரி : சைவர்கள் மனதை புண்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, புதுச்சேரி சிவனடியார்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து, புதுச்சேரி சிவனடியார்கள் திருக்கூட்ட நிர்வாகிகள், சீனியர் எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனு:கலாட்டா என்ற யூ-டியப் வலைதளத்தில் நடந்த விவாதத்தின் போது சுந்தரவள்ளி என்பவர் சைவ சமயத்தின் விடிவெள்ளியாகவும், சைவர்களுக்கு ஞானத் தந்தையாகவும் விளங்கும் திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிக ஈற்றுப் பாடலில் பிற சமயப் பெண்களை கற்பழிக்க வேண்டும் என்று பாடுகிறார் எனத் தவறான, உண்மைக்குப் புறம்பான, சைவர்களின் மனதைப் புண்படுத்தும்படியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தம்மைப் பேராசிரியை எனவும், தாம் சைவ சித்தாந்தம் பயின்றவர் என்றும் கூறிக்கொள்ளும் சுந்தரவள்ளிக்கு இவ்வுண்மை தெரியாதிருக்க வாய்ப்பில்லை. ஆக, வேண்டும் என்றே தாம் சார்ந்துள்ள மார்க்சிய மற்றும் நாத்திகக் கருத்தை உள்வாங்கிக் கோடிக்கணக் கான சைவ அடியார்களின் மனதைப் புண்படுத்தியுள்ளார்.கந்த சஷ்டி கவசம் தொடர்பான சர்ச்சையிலும் சைவ இலக்கியங்கள் ஆபாசம் நிறைந்தவை என்று பேசியுள்ளார். தொடர்ந்து இவ்வாறு பேசி சமூகத்தில் பிரச்னையை உருவாக்க எண்ணுகிறார்.எனவே அவர்மீதும் அவருக்குப் பின்புலமாக இருப்பவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X