பொது செய்தி

தமிழ்நாடு

வாகன சாலை வரி குழப்பம் ஏன்?

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; தமிழகத்தில், வாகனங்களுக்கான சாலை வரி செலுத்துவதில், குழப்பம் நிலவுவதாக, வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், வாகனங்களுக்கான காலாண்டு சாலை வரியை செலுத்து வதற்கு, ஜூலை வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும், 20 சதவீதத்துக்கும் அதிகமானோர், இன்னும் சாலை வரியை செலுத்தவில்லை. அவர்களுக்கு, அபராதத்துடன் இரு மடங்காக வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாடகை வாகன உரிமையாளர்கள் கூறியதாவது:தமிழகத்தில், மார்ச் முதல் ஜூன் வரை, வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், வாகனங்களுக்கான காலாண்டு வரியை மட்டும், தமிழக அரசு கட்டாய மாக வசூலிக்கிறது.ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், வரி விலக்கு மற்றும் வரிச்சலுகை, செப்டம்பர் வரை அவகாசம் என, பல்வேறு வகைகளில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், காலாண்டு வரியை தள்ளுபடி செய்வது குறித்த வழக்கு, நிலுவையில் உள்ளது. வரும், 6ல், அது விசாரணைக்கு வருகிறது. அதில் வரும் தீர்ப்பை பொறுத்து தான் வரி செலுத்துவது பற்றி முடிவு தெரியும். அதுவரை, குழப்பமான நிலையே இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X