புதுச்சேரியில் மேலும் 139 பேருக்கு கொரோனா| Dinamalar

இந்தியா

புதுச்சேரியில் மேலும் 139 பேருக்கு கொரோனா

Added : ஆக 02, 2020
Share

புதுச்சேரி : புதுச்சேரியில் ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 945 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், புதுச்சேரியில் 94 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 42 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பரிசோதனையுடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு 14.7 சதவீதமாகும்.தற்போது, புதுச்சேரியில் உள்ள கோவிட், ஜிப்மர், கோவிட் கேர் சென்டர் களில் 998 பேரும், காரைக்காலில் 47 பேரும், ஏனாமில் 89 பேர் என மாநிலம் முழுவதும் 1,357 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2,185 பேர் டிஸ்சார்ஜ்கோவிட் மருத்துவ மனையில் 17, ஜிப்மரில் 31, கோவிட் கேர் சென்டர்களில் 2 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர். வெளியூரில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் நேற்று குணமடைந்தார். மேலும், காரைக்காலில் 7, மாகியில் ஒருவர், ஏனாமில் 26 பேர் என, மொத்தம் 85 பேர் நேற்று முன்தினம் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 2,185 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.

51 பேர் உயிரிழப்பு : கொரோனா தொற்றினால், ஜிப்மரில் கடந்த 11ம் தேதி அனுமதிக்கப்பட்ட திருக்கனுார் காந்தி நகரை சேர்ந்த 75 வயது மூதாட்டி மற்றும் கதிர்காமம் கோவிட் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட வைத்திக்குப்பத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,593 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X