பொது செய்தி

தமிழ்நாடு

டயாலிசிஸ் மையம் வரும், 5ல் திறப்பு விழா

Added : ஆக 02, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் வடக்கு ரோட்டரி வாயிலாக, ரயில்வே ஸ்டேஷன் அருகே, மாநகராட்சி தாய்சேய் நல மருத்துவமனை வளாகத்தில், 'வரம்' என்ற பெயரில், டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்காக, டயாலிசிஸ் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக, 1.75 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. அங்கு, 10 மெஷின்கள் அமைக்கப்பட்டுள்ளது.வரும், 5ம் தேதி முதல், பயன்பாட்டுக்கு வருகிறது. நோயாளிகள், 375 ரூபாய் செலுத்தி, டயாலிசிஸ் சேவை பெறலாம். கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு இலவச சேவையும் அளிக்கப்படும்.திறப்பு விழாவில், எம்.எல்.ஏ., கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், ரோட்டரி நிர்வாகிகள் கலந்து கெள்கின்றனர். விவரங்களுக்கு, 95855 44216, 91595 57631 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X