பொது செய்தி

தமிழ்நாடு

கட்டட அனுமதி கோப்புகள் பைசல் செய்ய முடிவு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; -நிலுவையில் உள்ள கட்டட அனுமதி கோப்புகளை, விரைந்து பைசல் செய்யும் நடவடிக்கைகளை, தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.

தமிழகத்தில், மார்ச், 24ல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதற்கு முன் பெறப்பட்ட, கட்டட அனுமதி கோரும் விண்ணப்பங்கள், பல்வேறு கட்டங்களில் நிலுவையில் உள்ளன. இந்த கோப்புகள் தொடர்பாக கட்டணங்கள் செலுத்துவதற்கு, கூடுதல் அவகாசம் வழங்கி, அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், நகரமைப்பு துறையான, டி.டி.சி.பி., சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., ஆகியவற்றில், 500க்கும் மேற்பட்ட கோப்புகள் நிலுவையில் உள்ளன.இதில், மனைப்பிரிவு ஒப்புதல் தொடர்பான கோப்புகள் மட்டும், அதிகாரிகள் நிலையில் முடிக்கப்படுகின்றன. பெரிய கட்டுமான திட்டங்கள் தொடர்பான கோப்புகள், நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, வீட்டுவசதி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், கட்டுமான துறையை இயல்பு நிலைக்கு கொண்டு வர, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கட்டுமான திட்ட அனுமதி கோப்புகளை, பைசல் செய்யும் பணிகளை விரைவுபடுத்த, சம்பந்தப்பட்ட பிரிவுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.குறிப்பாக, தொழில் முதலீடுகள் தொடர்பான திட்டங்களின் கோப்புகளை, விரைந்து முடிக்க, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அடுத்த, 20 நாட்களில், பெரும்பாலான விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு விடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X