சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாய்க்கால் துார்ந்து கிடப்பதால் தண்ணீர் செல்வதில் சிக்கல்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சேத்தியாத்தோப்பு : வீராணம் ஏரியிலிருந்து சாத்தமங்கலம் வழியாக பாசனத்திற்கு செல்லும் வாய்க்கால் புதர்மண்டி மண் துார்ந்து கிடப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வீராணம் ஏரியிலிருந்து பூதங்குடி மதகு வழியாக சாத்தமங்கலம் வழியாக ஒரத்துார், சாக்காங்குடி, ஆயிப்பேட்டை பாசிமுத்தான் ஓடை வரை செல்லும் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் வழியாக சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. வாய்க்கால் புதர்மண்டியும், செடிகொடிகள் வளர்ந்தும், மண் துார்ந்தும் ஆகாயத் தாமரை படர்ந்துள்ளது.வாய்க்கால் புதர்மண்டி கிடப்பதால் தண்ணீர் செல்வதில் ஏற்படும் நிலை உள்ளது. மேலும், கடந்தாண்டுதான் வாய்க்காலை துார்வாரி சுத்தப்படுத்தியுள்ள நிலையில் வாய்க்கால் முழுதும் புதர்மண்டி கிடக்கிறது.
எனவே புதர்மண்டி கிடக்கும் வாய்க்காலை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X