பசுந்தாள் செடிகளை பயிரிடுவதில் ஆர்வம் | Dinamalar

பசுந்தாள் செடிகளை பயிரிடுவதில் ஆர்வம்

Added : ஆக 02, 2020 | |
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் விவசாய நிலத்தை வளமாக்க தக்கபூண்டு போன்ற பசுந்தாள் செடிகளை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். நெல்லிக்குப்பத்தில் மண்ணின் தரத்தை உயர்த்த பசுந்தாள் செடிகளான சணப்பு, தக்கபூண்டு அவுரி ஆகியவற்றை பயிரிட துவங்கி உள்ளனர். இந்த பயிர்கள் 40 நாட்கள் வளர்ந்தவுடன், மடித்து உழுது நெல் பயிரிடுவதால் மண்வளம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் விவசாய நிலத்தை வளமாக்க தக்கபூண்டு போன்ற பசுந்தாள் செடிகளை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

நெல்லிக்குப்பத்தில் மண்ணின் தரத்தை உயர்த்த பசுந்தாள் செடிகளான சணப்பு, தக்கபூண்டு அவுரி ஆகியவற்றை பயிரிட துவங்கி உள்ளனர். இந்த பயிர்கள் 40 நாட்கள் வளர்ந்தவுடன், மடித்து உழுது நெல் பயிரிடுவதால் மண்வளம் அதிகரிப்பதோடு உரம் தேவையும் குறைகிறது. அதேபோல் ஆடு மாடு சாணத்தை மக்க வைத்து உரமாக பயன்படுத்துகின்றனர். இது போன்று தொடர்ந்து செய்வதன் மூலம் விரைவில் மண்ணின் தரம் உயரும். உரங்களே பயன்படுத்தாமல் பயிர் செய்யலாம் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X