போலி சான்றிதழில் பெட்ரோல் நிலையங்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போலி சான்றிதழில் பெட்ரோல் நிலையங்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : ஆக 02, 2020
Share
சென்னை; போலி சான்றிதழ் அடிப்படையில், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் துவங்கப்பட்டது குறித்து, போலீசார் கோரும் ஆவணங்களை வழங்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.பெட்ரோல், சமையல் எரிவாயு நிலையங்கள் துவங்க, தடையில்லா சான்றிதழை போலியாக தயாரித்து வழங்கிய கும்பலை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.முன்னாள் போலீஸ் கமிஷனர்

சென்னை; போலி சான்றிதழ் அடிப்படையில், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் துவங்கப்பட்டது குறித்து, போலீசார் கோரும் ஆவணங்களை வழங்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பெட்ரோல், சமையல் எரிவாயு நிலையங்கள் துவங்க, தடையில்லா சான்றிதழை போலியாக தயாரித்து வழங்கிய கும்பலை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.முன்னாள் போலீஸ் கமிஷனர் பெயரில், இந்த போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டது.கும்பலில் உள்ள சிவகுமார், ஜெயபிரகாஷ் ஆகியோர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதற்கு, போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'போலி சான்றிதழ் அடிப்படையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 67 பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன' என, கூறப்பட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுதும், போலி சான்றிதழ் அடிப்படையில், எத்தனை பெட்ரோல் மற்றும் எரிவாயு நிலையங்கள் துவங்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை அளிக்க, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது. இவ்வழக்கு, டிவிஷன் பெஞ்ச் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் இணைத்துக் கொள்ளும்படி, எண்ணெய் நிறுவனங்கள் கோரியதை, நீதிபதிகள் ஏற்றனர். போலி சான்றிதழ் குறித்து ஆய்வு செய்ய, போலீசார் வரும் போது, அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும், ஆவணங்களை நகல் எடுக்கவும் அனுமதிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை, வரும், 5ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X