ஜெ., ஆபரணங்களை காட்சிப்படுத்த திட்டம் அரசுக்கு எதிராக ஐகோர்ட்டில் தீபா வழக்கு - Jayalalitha | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., ஆபரணங்களை காட்சிப்படுத்த திட்டம் அரசுக்கு எதிராக ஐகோர்ட்டில் தீபா வழக்கு

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (2)
Share
சென்னை; 'சென்னை, மெரினா கடற்கரையில், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் போது, போயஸ் தோட்டம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டியது இல்லை.'ஜெயலலிதா பயன்படுத்திய தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்களை காட்சிக்கு வைக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.மறைந்த ஜெயலலிதாவின், சகோதரர் மகள் தீபா, தாக்கல் செய்த மனு:எங்கள் குடும்ப சொத்தான,

சென்னை; 'சென்னை, மெரினா கடற்கரையில், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் போது, போயஸ் தோட்டம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டியது இல்லை.

'ஜெயலலிதா பயன்படுத்திய தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்களை காட்சிக்கு வைக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.மறைந்த ஜெயலலிதாவின், சகோதரர் மகள் தீபா, தாக்கல் செய்த மனு:எங்கள் குடும்ப சொத்தான, சென்னை, போயஸ் தோட்டத்து வேதா நிலையத்தை கையகப்படுத்துகின்றனர்.

சட்டவிரோதமானது

நாங்கள் தான், ஜெ.,வின் சட்டப்பூர்வ வாரிசு. வாரிசுகளிடம் கேட்காமல், கையகப்படுத்துவதாக, கலெக்டர் அறிவித்தது சட்டவிரோதமானது.ஜெ.,வின் சொத்துக்களை நிர்வகிக்க, நியமிக்கப்பட்ட நிர்வாகிகளில், நானும் ஒருவர். சொத்து விபரங்களை கணக்கெடுத்து, நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக, வேதா நிலையம் செல்ல எங்களுக்கு அனுமதி தரவில்லை.மெரினா கடற்கரையில், ஜெ.,க்கு நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. அதனால், வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்ற தேவையில்லை. ஒரு பெண்ணின் ஆடை, ஆபரணங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட உடைமைகளை, அரசு எடுப்பது நியாயமற்றது; அநாகரிகமானது. பெண்ணின் கண்ணியத்துக்கு தீங்கு விளைவிப்பதாகும். என் தாயை போன்ற அத்தையை, எந்த விதத்திலும் அவமானப்படுத்துவதை, என்னால் அனுமதிக்க முடியாது.

வேதா நிலையத்தில், முன்னோர் அளித்த பொக்கிஷமாக தங்கம், வெள்ளி, பிளாட்டினம், தாமிரம், வைரம் உள்ளது. விலை மதிப்பற்ற கலைப்பொருட்கள் உள்ளன. இதை எல்லாம், கவனமுடன், என் அத்தை பராமரித்து வந்தார். அவற்றை எல்லாம் தொடுவதற்கு, யாருக்கும் உரிமை இல்லை. நினைவில்லமாக மாற்றுகிறேன் என்ற போர்வையில், அசையும் சொத்துக்களை, அரசு எடுத்துள்ளது. அரசியல் ஆதாயம்சொத்துக்களை, அரசு மோசடி செய்ய போகிறது. வரும் தேர்தலுக்காக, அரசியல் ஆதாயம் கருதி, இந்த கையகப்படுத்தும் நடவடிக்கைகளை, அரசு மேற்கொள்கிறது. அத்தை பயன்படுத்திய தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்களை, காட்சிக்கு வைக்கக் கூடாது. போயஸ் தோட்டத்தில் நினைவில்லம் அமைப்பது, மக்களின் விருப்பம் என, முதல்வர் கூறுவதற்கு, எந்த ஆதாரமும் இல்லை.போயஸ் தோட்டம், மிக முக்கியமான பகுதி. சதுர அடி, 12 ஆயிரத்து, 60 ரூபாய் என, நிர்ணயம் செய்திருப்பது மோசடி. வழிகாட்டு மதிப்பீடு, சந்தை மதிப்பு, இதில் எது அதிகமோ, அதை வைத்து சொத்து மதிப்பை நிர்ணயிக்க வேண்டும்.எனவே, நில ஆர்ஜித அதிகாரி பிறப்பித்த இழப்பீடு தொகையை ரத்து செய்ய வேண்டும். சொத்து விபரங்களை கணக்கிட்டு, நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க, எங்களை அனுமதிக்க வேண்டும்.

வேதா நிலையத்தில் உள்ள அசையும் சொத்துக்களை எடுத்து செல்ல, அரசுக்கு தடை விதிக்க வேண்டும். அங்குள்ள விலை மதிப்பற்ற பொக்கிஷங்களை, என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.வழக்கு விசாரணை முடியும் வரை, இழப்பீட்டு தொகையில் இருந்து பணம் எடுக்க, வருமான வரித் துறைக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X