டிரான்ஸ்பார்மர் துாண்கள் சீரமைக்கப்படுமா? | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டிரான்ஸ்பார்மர் துாண்கள் சீரமைக்கப்படுமா?

Added : ஆக 02, 2020
Share
புதுச்சத்திரம் : சீனுவாசபுரத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் துாண்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சத்திரம் அடுத்த சீனுவாசபுரத்தில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மின்இணைப்பு பெறும் வகையில் இங்கு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட விவசாயிகள்

புதுச்சத்திரம் : சீனுவாசபுரத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் துாண்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சத்திரம் அடுத்த சீனுவாசபுரத்தில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மின்இணைப்பு பெறும் வகையில் இங்கு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதியைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மின்மோட்டார் இணைப்பு பெற்று பாசனம் செய்து வருகின்றனர்.இந்த டிரான்ஸ்பார்மரில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகிறது. இதனால் டிரான்ஸ்பார்மர் இடிந்து விழுந்தால் இப்பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்படும் நிலை ஏற்படும்.எனவே இடிந்துவிழும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் துாண்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X