இந்தியா

மருத்துவ காப்பீட்டு திட்டம் செயலிழப்பால் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கும்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

புதுச்சேரி : செயலிழந்துள்ள மருத்துவ காப்பீடு திட்டத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடும் என தி.மு.க., தெற்கு மாநில அமைப்பாளர் சிவாஎம்.எல்.ஏ., எச்சரித்துள்ளார்.

அவரது அறிக்கை:முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியிலுள்ள 3.40 லட்சம் குடும்பத்தினருக்கு பயனடையும் வகையில் முழு சுகாதார பாதுகாப்பு திட்டம் உடனடியாக துவக்கப்பட உள்ளது என அறிவித்தார். இந்த மகிழ்ச்சி ஒரு வார காலம் கூட நீடிக்கவில்லை.காரணம், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அமல்படுத்தியுள்ள பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான காப்பீட்டு பிரிமியத்தொகையை செலுத்தி, புதுப்பிக்கவில்லை.புதுச்சேரியில் கடந்த 29ம் தேதியில் இருந்து பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயலில் இல்லை.

இதனால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 28ம் தேதிக்கு முன்பு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நோயாளிகள் கூட தற்போது அத்திட்டத்தில் பயன் பெற முடியவில்லை. இதேநிலை நீடித்தால், ஏழை நோயாளிகள் பலர் உயிரிழக்க நேரிடும்.எனவே அரசு உடனடியாக காப்பீட்டு தொகையை செலுத்தி பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். புதிய திட்டம் கொண்டு வருவதாக இருந்தால் பழைய திட்டத்தில் உள்ளவர்கள் பாதிக்காத வகையில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும், பல ஏழை நோயாளிகளின் உயிர் பறிபோகும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.உயிரிழப்பு ஏற்படும் குடும்பத்தினர் இந்த அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தக்கூடும் என்பதையும் இந்த அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X