பி.எம்., கிசான் திட்டம்: 8,900 பேர் பயன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பி.எம்., கிசான் திட்டம்: 8,900 பேர் பயன்

Added : ஆக 02, 2020
Share

பல்லடம்:பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா எனப்படும் 'பி.எம்.கிசான் திட்டம், விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில், இணைந்துள்ள விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணையாக, அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.விவசாய தொழில் நிறைந்த பல்லடம் தாலுகாவில், விவசாயிகள் ஏராளமானோர் இத்திட்டத்தில் இணைய விண்ணப்பித்திருந்தனர்.முதல் தவணை செலுத்தப்பட்ட நிலையில், இரண்டாம் தவணை செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.பல்லடம், பொங்கலூர் ஒன்றியங்களுக்கு உட்பட்டு, அதிகபட்சமாக, வாவிபாளையத்தில், 646, மற்றும் குறைந்தபட்சமாக, புளியம்பட்டியில், 129 என, மொத்தம், 8,991 விவசாயிகள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X