இந்தியா

தொழில்நுட்ப கோளாறால் சாராயக்கடை ஏல நேரம் மாற்றம் ஒரு பிரிவினர் எதிர்ப்பால் கலால் துறையில் பரபரப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

புதுச்சேரி : தொழில்நுட்ப கோளாறால் ஒத்தி வைத்து நடத்தப்பட்ட சாராயக்கடை ஏலத்திற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் உள்ள 84 சாராயக்கடைகளுக்கு ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் ஏலம் நடத்தப்படும். ஏலம் எடுத்தவர்கள், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை, கிஸ்தி தொகையில் 5 சதவீத தொகையை உயர்த்தி, புதுப்பித்துக் கொள்ளலாம்.புதுப்பிக்காத கடைகளுக்கு இணையதளம் மூலம் ஏலம் விடப்படும். கடந்தாண்டு ஏலம் விடப்பட்ட கடைகளுக்கான உரிமத்தை புதுப்பிக்க பலர் பணம் கட்டியிருந்தனர். அவர்களுக்கு புதுப்பித்தலுக்கான கடிதம் வழங்கவில்லை. அதேபோன்று, ஏலத்தில் பங்கேற்க பணம் கட்டியவர்களுக்கு சிலருக்கு 'பாஸ்வேர்டு' கொடுக்கவில்லை.

இந்நிலையில் புதுப்பிக்காத கடைகளுக்கு நேற்று மதியம் ஏலம் துவங்கிய நிலையில், ஏலத்தில் பங்கேற்க இருந்தவர்கள் ஒரே நேரத்தில் 'பாஸ்வேர்டை' இணையதளத்தில் பதிவிட முயன்றதால், இணையதளம் முடங்கியது.புதுப்பித்தல் ஆணை கிடைக்காதவர்களும், ஏலத்தில் பங்கேற்க பாஸ்வேர்டு கிடைக்காதவர்கள் மற்றும் பாஸ்வேர்டு கிடைத்தும் தொழில் நுட்ப கோளாறால் ஏலத்தில் பங்கேற்க முடியாதவர்களும் ஒரே நேரத்தில் கலால் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், கடை புதுப்பித்தலுக்கு பணம் கட்டியவர்களுக்கு அதற்கான ஆணையை வழங்கினர். இணையதளம் முடங்கியதால், பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரை நடக்க இருந்த மின்னணு ஏல நேரத்தை மாலை 4.30 மணிக்கு மாற்றினர்.அதன்படி மாலை சாராயக்கடை ஏலம் நடத்தப்பட்டது. இதனை அறிந்த 'பாஸ்வேர்டு' வழங்காததால் ஏலத்தில் பங்கேற்க முடியாதவர்கள் கலால் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வேறு தேதியில் ஏலத்தை நடத்த வேண்டும் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அவர்களை போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்திவிட்டு, திட்டமிட்டப்படி 33 சாராயக்கடைகளுக்கான ஏலம் நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X