இந்தியா

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் கொரோனா பரிசோதனை முகாம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

புதுச்சேரி : மேட்டுப்பாளையம் சுகாதாரம் மற்றும்நலவாழ்வு மையம் சார்பில், கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட தொழில் மைய வளாகத்தில் நடந்த பரிசோதனை முகாமை, வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். சுகாதாரத் துறை துணை இயக்குனர் அல்லிராணி, சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களுக்கான மண்டல அதிகாரி அன்புசெந்தில், நலவாழ்வு மையத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி நளினிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கொரோனா பரிசோதனை முகாமில் பங்கேற்ற 219 பேருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டன. சளி மாதிரியை, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியின் டாக்டர்கள் குழுவினர் சேகரித்தனர்.

பரிசோதனை முடிவுகள் நாளை இரவு வெளியாகிறது.பரிசோதனை முகாமிற்கான ஏற்பாடுகளை, மேட்டுப்பாளையம் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையத்தின் செவிலியர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X