பொது செய்தி

தமிழ்நாடு

'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு'

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'எனக்கு ஏதாவது நடந்தால்  சூர்யாவே பொறுப்பு'

சென்னை; 'சூர்யா, விஜய் ரசிகர்கள், என்னை போனில் மிரட்டுகின்றனர்; எனக்கு ஏதாவது நேர்ந்தால், சூர்யா தான் பொறுப்பு' என, நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் கூறியுள்ளார்.

'ஹிந்தி பட உலகை போல, தமிழ் திரையுலகிலும் வாரிசு அரசியல் உள்ளது. சில கும்பல்களின் செயல்களால், பலருக்கு பட வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன' என, நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், டுவிட்டரில் புகார் கூறி வருகிறார்.சமீபத்தில், சூர்யா, தனுஷ், விஜய் குறித்தும் இவர் பேசியிருந்தார்.

இந்நிலையில், சூர்யா, விஜய் ரசிகர்கள், தன்னை தொடர்ந்து, போனில் மிரட்டி வருவதாக கூறியுள்ளார்.டுவிட்டரில் மீரா மிதுன் கூறியுள்ளதாவது: சூர்யா, விஜய் ரசிகர்களிடம் இருந்து, மோசமான செய்திகள், மொபைல் அழைப்புகள், கற்பழிப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்கள் வருகின்றன. உங்கள் மனைவியருக்கும், குழந்தைகளுக்கும் இதுபோல் நடந்தால் ஏற்பீர்களா...; 80க்கும் மேற்பட்ட எண்களில் இருந்து மிரட்டல்கள் வருகின்றன

.என் மொபைல் போன் எண்ணை, பல்வேறு குழுக்களுக்கு பரவ விட்டுள்ளனர்.எனக்கு ஏதாவது நடந்தால், சூர்யா தான் பொறுப்பாவார். உறுதியற்ற நிலைக்கு என்னை துாண்டுகின்றனர். நிச்சயமாக இதற்கு பதிலளிப்பீர்கள் என, நம்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
02-ஆக-202015:01:50 IST Report Abuse
s.rajagopalan கோடம்பக்கத்து கீழான கலாச்சாரம் தெரிந்ததுதான் .. ஆனால் இந்த அளவிற்கு சீரழிந்துவிட்டதா? சூர்யா-ஜோதிகா-விஜய்.. கூட்டணி .. mafia ரேஞ்சுக்கு போய்விடக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X