பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று அதிகரிப்புபூவாலையில் மருத்துவ முகாம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த பூவாலை ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.

புதுச்சத்திரம் அடுத்த பூவாலை கிராமத்தில் டாஸ்மாக் ஊழியர், கடலுார் சிப்காட் தொழிற்சாலை ஊழியர் என இருவர் கொரோனாவால் பாதித்தனர். கடந்த 29 ம் தேதி டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் பரிசோதனை செய்ததில், பூவாலை கிழக்கு பகுதியில் 16 பேருக்கும், மேற்கு பகுதியில் 4 பேர் உட்பட 20 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.சுகாதாரத்துறை சார்பில், பூவாலை ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளனவா என நேற்று பரிசோதனை செய்தனர்.

கிருமி நாசினி தெளித்து, பூவாலை பகுதிக்கு வெளியாட்கள் வராத வகையில் தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.ஒரே கிராமத்தில் 20 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட தகவல், புதுச்சத்திரம் சுற்றுப் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X