அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓடி ஒளிந்தவர்களுக்கு தேர்தலில் 'சீட்' இல்லை தி.மு.க.,வில் அறிமுகமாகிறது புதிய 'பார்முலா'

Added : ஆக 02, 2020
Share
Advertisement

வரும் சட்டசபை தேர்தலில், யாருக்கு, 'சீட்' வழங்குவது என்பது தொடர்பாக, தி.மு.க.,வில் புது, 'பார்முலா' உருவாக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்காமல், கோடைவாச தலங்களில் ஓடி ஒளிந்த நிர்வாகிகளுக்கு, தி.மு.க.,வில், 'சீட்' கிடைக்காது என்ற, தகவல் வெளியாகி உள்ளது.ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தி.மு.க., சார்பில், 'ஒருங்கிணைவோம் வா' என்ற திட்டம் வாயிலாக, நிவாரண உதவி வழங்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது.உயிர் தியாகம்இப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர், ஜெ.அன்பழகன் தன் உயிரையும் தியாகம் செய்தார்.

ஆனால், மூத்த தலைவர், முன்னாள் அமைச்சரான துரைமுருகன், ஏலகிரியில் ஓய்வெடுக்கிறார்.அவரை போலவே, பல முன்னாள் அமைச்சர்களும், எம்.பி.,க்களும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களுக்கு சென்று, ஒளிந்து கொண்டனர்.தொகுதி மக்களுக்கு நிவாரண பணிகளை வழங்க செல்லவில்லை என்பதால், அவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

அதேபோல, சென்னையை சேர்ந்த தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவர், ஊட்டியில் உள்ள, தன் பங்களாவை விட்டு வெளியே வரவே இல்லை என்கின்றனர். அதனால், அவரது தொகுதி மக்களும், ஓட்டு கேட்க வரும் போது பாடம் புகட்டுவோம் என, கொந்தளிக்கின்றனர். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததால், அத்தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த சட்டசபை தேர்தலுக்கு பின், இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டால், ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்து விடும் என்பதால், உடல் நல தகுதியுள்ளவர்களுக்கு மட்டும், 'சீட்' வழங்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.மேலும், நிவாரண உதவி பணிகளில் ஈடுபடாமல் ஓட்டம் பிடித்த, எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு, மீண்டும் சீட் வழங்க வாய்ப்பில்லை என்ற, தகவலும் அறிவாலய வட்டாரத்தில் வெளியாகியுள்ளது.

வெற்றி வியூகம்

இது குறித்து, அறிவாலய வட்டாரங்கள் கூறியதாவது:அடுத்த ஆண்டு, மே மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், போட்டியிடுவதற்கு தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான, 'ஐபேக்' நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு, ௪௫ வயதுக்கு உட்பட்டோருக்கே, அதிக முன்னுரிமை வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில், தேர்தல் வெற்றி வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. கடந்த, ௨௦௦௬ சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், பா.ம.க., - காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன், தி.மு.க., ஆட்சி நடத்த வேண்டிய நிலை இருந்தது. அப்போது, தி.மு.க., அரசை, 'மைனாரிட்டி' அரசு என, அ.தி.மு.க., விமர்சித்தது. வரும் தேர்தலில், அதே மாதிரியான முடிவு ஏற்படாமல் இருக்க, கூட்டணி கட்சிகளுக்கு, குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க, தி.மு.க., மேலிடம் முடிவு செய்துள்ளது.

மொத்தமுள்ள, ௨௩௪ தொகுதிகளில், காங்கிரசுக்கு மட்டும், 30 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்படலாம்.190 தொகுதிகள்மற்ற கூட்டணி கட்சிகளுக்கு, ஒரு லோக்சபா தொகுதிக்கு, மூன்று சட்ட சபை தொகுதி என்ற வீதத்தில் பங்கீடு செய்ய, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதுகுறைந்தபட்சம், ௧௮௦ - ௧௯௦ தொகுதிகளில், தி.மு.க., போட்டியிட விரும்புகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர, மற்ற கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கவும், தி.மு.க., மேலிடம் விரும்புகிறது. தி.மு.க., வேட்பாளர் தேர்வில், அவர்களின் உடல் நலத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.

குறிப்பாக, இருதய நோய் உள்ளவர்கள், சுறுசுறுப்பாக செயல்பட உடல் நலம் இடம் தராதவர்களுக்கு, போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டாம் என, ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரலாமா அல்லது மறுக்கலாமா என்பது குறித்தும், ஆலோசிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X