கோவை ஞானியை எங்களால் மறக்க இயலாது

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020
Advertisement
நவீன தமிழ் இலக்கிய தளத்தின், முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர் கோவை ஞானி. கோவை சோமனூரில் பிறந்த, இவரின் இயற்பெயர் பழனிசாமி.40 ஆண்டுகளுக்கு மேலாக, அரசு பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, வி.ஆர்.வி., நகரில் வசித்து வந்த இவர், வயது முதிர்வு காரணமாக சமீபத்தில் காலமானார். கண் பார்வை இழந்த நிலையிலும் கூட,
கோவை ஞானியை எங்களால் மறக்க இயலாது

நவீன தமிழ் இலக்கிய தளத்தின், முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர் கோவை ஞானி. கோவை சோமனூரில் பிறந்த, இவரின் இயற்பெயர் பழனிசாமி.40 ஆண்டுகளுக்கு மேலாக, அரசு பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கோவை, துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு, வி.ஆர்.வி., நகரில் வசித்து வந்த இவர், வயது முதிர்வு காரணமாக சமீபத்தில் காலமானார்.

கண் பார்வை இழந்த நிலையிலும் கூட, கடந்த 32 ஆண்டுகளாக படிப்பதையும், எழுதுவதையும் நிறுத்தவில்லை. வெளியூர்களில் இருந்து கோவைக்கு வரும் எழுத்தாளர்கள், இவரை சந்தித்து ஊரையாடுவதை, இலக்கிய பணியாகவே கருதினர். இவரது இலக்கிய பங்களிப்புக்காக, தமிழக அரசு விருது, கனடா இலக்கிய தோட்டம் இயல் விருது உள்ளிட்ட பல இலக்கிய விருதுகளை பெற்றவர். கோவையில் உருவான வானம்பாடி கவிதை இயக்கத்தின் துவக்க காலத்தில், இணைந்து செயல்பட்ட ஞானி, பிறகு அதிலிருந்து முரண்பட்டு, தனித்து செயல்பட்டார்.

கவிஞர்கள் சிற்பியும், புவியரசும் ஞானியின் சமகாலத்து படைப்பாளர்களில் முக்கியமானவர்கள். தத்துவார்த்த அடிப்படையில், ஞானியின் படைப்பிலக்கிய கோட்பாடுகளில், இவர்கள் இருவருக்கும் உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர்கள் என்ற வகையில், ஞானியின் மீது அன்பும், மரியாதையும் கொண்டவர்கள்.


கவிஞர் சிற்பி: (சாகித்ய அகாடமி விருதாளர்)


latest tamil news


வானம்பாடி கவிதை இதழை துவங்கிய போது அவரும் எங்களுடன் இருந்தார்.அதில் வரும் கவிதைகளிலும், மார்க்சிய கருத்துக்கள் இருக்கவேண்டும் என, விரும்பினார். அது குறித்து விமர்சனமும் செய்தார்.அவர் எந்த கருத்துக்களுக்காக, எங்களிடம் இருந்து வேறுபட்டு சென்றாரோ, பிற்காலத்தில் அவர் அதற்கு எதிரான திசையில் பயணித்தார். அதன் வாயிலாக புதிய இலக்கிய நண்பர்கள் அவருக்கு கிடைத்தனர்.தமிழ் மரபின் தொடர்ச்சியாக, புதிய நோக்கில் இலக்கிய படைப்புகள் இருக்க வேண்டும் என்பதில் ஞானி உறுதியாக இருந்தார். ஞானியின் இலக்கிய பார்வை தனித்துவமானது.


கவிஞர் புவியரசு : (சாகித்ய அகாடமி விருதாளர்)


latest tamil news


கோவை ஞானிக்கு படைப்பிலக்கியத்தில் ஆர்வம் இல்லை. இலக்கிய விமர்சனத்தில் தான் அதிகம் ஈடுபாடு இருந்தது. அவரது அரசியல் கருத்துக்களில், எனக்கு உடன்பாடு இல்லை. இலக்கியத்தில் அவரது பார்வை வேறு; என் பார்வை வேறு என்றாலும், அவரது இறுதி காலம் வரை நண்பராகதான் இருந்திருக்கிறேன். அவரது மறைவு, தமிழ் இலக்கியத்துக்கு இழப்புதான்.


'ஞானிக்காக நான் படித்தேன்!


'மீனா (கோவை ஞானியின் உதவியாளர்) நான், 14 ஆண்டுகள் அவருக்கு உதவியாளராக இருந்திருக்கிறேன். அவர் விரும்பும் நுால்களை படிப்பதுதான் என் பணி. ஒரு வாரம் முழுவதும் படிக்க தேவையான நுால்களை தேர்வு செய்து வைத்து இருப்பார்.நான் படிப்பதை கேட்டு, புரிந்து கொள்வார்.முக்கிய கருத்துகளை அடிக்கோடு போடச்சொல்வார். சில பக்கங்களை மறுபடியும் படிக்க சொல்வார். ஒருமுறை நுாலை படித்து முடித்து விட்டால், அந்த நுாலின் எல்லா பக்கங்களையும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு வெளி வந்த மறுநாளே, அந்த நுாலை படித்து முடித்து விடுவார். பூமணியின் 'அஞ்ஞாடி', சு.வெங்கடேசனின் 'காவல் கோட்டம்' நாவல்களுக்கு, விருது அறிவிக்கும் முன்பாகவே படித்து விட்டார்.நான் வாசிக்கும் போதே, இந்த இரு நுால்களுக்கும் சாகித்ய அகாடமி பரிசு கிடைக்கும் என்று சொன்னார். அதே போல் கிடைத்து. கட்டுரைகளை அவர் சொல்லச்சொல்ல நான் எழுதுவேன். தினமும், ஆறு மணி நேரம் அவருக்காக படிப்பதும், எழுதுவதும்தான் என் வேலை.


latest tamil news


நான் அவருக்கு உதவியாளராக சேரும் போது, பி,ஏ., தமிழ் படித்து இருந்தேன். என்னை பி.ஹெச்.டி., வரை படிக்க வைத்து, முனைவர் பட்டம் வாங்கி கொடுத்து இருக்கிறார். இப்போதும், அவரை நினைத்து, தினமும் ஒரு புத்தகம் படிக்கிறேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X