பொது செய்தி

தமிழ்நாடு

சிராஜூதீன் பிரேம் போடும் முருகன் படங்களின் மவுசே தனி!

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 சிராஜூதீன் பிரேம் போடும்  முருகன் படங்களின் மவுசே தனி!

காலையில் லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகன் என, வீட்டு சுவரில் தொங்கும், கடவுள் படங்களை பார்த்து வணங்கும் போது, கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான். காலண்டர்களில் இருக்கும் சாமி படங்களை, பிரேம் போட்டு பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் பழக்கம் காலம், காலமாக நம்மிடம் இருந்து வருகிறது.கோவை காந்திபார்க்கில், மூன்று தலைமுறையாக, கண்ணாடி பிரேம் போடும் கடை நடத்தி வருகிறார் சிராஜூதீன். பாய் கடையை தேடி வந்து, சாமி படங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் உள்ளனர். சிராஜூதீன் பாயுடன் பேசிய போது, ''கண்ணாடி பிரேம் போடும் தொழிலை, என் தாத்தா, அப்பா, நான் என, மூன்று தலைமுறையாக செய்து வருகிறோம். இந்த தொழிலில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி இருக்கிறது. எல்லா மதத்தை சேர்ந்த கடவுள் படங்களையும், பிரேம் போட்டு விற்பனை செய்து வருகிறேன். 'பாய் கடையில் வாங்கும் சாமி படங்களுக்கு இருக்கும் மகிமையே தனி' என்று வாடிக்கையாளர்கள் சொல்லும் போது, எனக்குள் ஏற்படும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை,'' என்கிறார்.''படங்களை பிரேம் போட்டு சுவரில் மாட்டும் வழக்கம் குறைந்து வருகிறதே... என்று கேட்டதற்கு, ''உண்மைதான். இருந்தபோதும், கடவுள் மேல் உள்ள பக்தி, மக்களுக்கு குறையவில்லை,'' என்கிறார் சிராஜூதீன். அவருக்கு, பக்ரீத் பண்டிகை வாழ்த்து சொல்லி விடை பெற்றோம்!

”முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஓவியர்கள் வரைந்த கடவுள் படங்கள் அற்புதமாக இருந்தன. அதில் உயிரோட்டம் இருந்தது. இன்று கம்ப்யூட்டர் உதவியுடன் வரையப்படும் சாமி படங்களில் எந்த தெய்வீக தன்மையும் தெரிவதில்லை; நேர்த்தியாகவும் இல்லை” என்று வருத்த படுகிறார் சிராஜுதீன். ஐம்பது ஆண்டுகளாக கோவையில் சாமி படங்கள் ஃப்ரேம் போட்டு விற்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார் இவர். “பாய் கடையில் வாங்கும் சாமி படம் என்றால் தனி ராசிதான்” என்று ஒரு நம்பிக்கை பரவி இருக்கிறது. அதனால் வெளியூர்களில் இருந்தும் இவரது கடையை தேடி வந்து சாமி படங்களை வாங்கி செல்கிறார்கள்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
04-ஆக-202012:42:00 IST Report Abuse
SAPERE AUDE ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமேசென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்துநின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினேஎன்றார் திருமூல நாயனார்.கடவுள் நமது மனதிதான் உள்ளார்.அவருக்கு ஜாதி மதம் இல்லை.
Rate this:
Cancel
04-ஆக-202006:58:24 IST Report Abuse
லட்சுமி கோவை கடை பேர சொல்லிருந்த நல்லா இருக்கம். கை பேசி எண் முகவரி பதிவிடுங்கள் நாங்களும் பயன் பெறுவோம்
Rate this:
Cancel
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
03-ஆக-202023:23:27 IST Report Abuse
Venkat that is Tamil Nadu (South India) for you..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X