பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த 7,010 பேர்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், நேற்று மட்டும், 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; 56 ஆயிரம் பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், 62 தனியார் ஆய்வகங்கள் உட்பட, 121 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில், நேற்று மட்டும், 57 ஆயிரத்து, 968 பேருக்கு, பரிசோதனை நடந்தது.

அவர்களில், 5,879 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில், 1,074; காஞ்சிபுரத்தில், 368; தேனியில், 327; செங்கல்பட்டில், 314; திருவள்ளூரில், 305; விருதுநகரில், 286; துாத்துக்குடியில், 243; திருவண்ணாமலையில், 242 பேர்.கன்னியாகுமரியில், 198; வேலுாரில், 197; திருநெல்வேலியில், 181; தென்காசியில், 178; தஞ்சாவூரில், 167; விழுப்புரத்தில், 158 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில், நேற்று வரை, 27.18 லட்சம் பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 2.51 லட்சம் பேருக்கு, நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டியது. நேற்று வரை, ஒரு லட்சத்து, 877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில், 14 ஆயிரத்து, 866; திருவள்ளூரில், 14 ஆயிரத்து, 128; மதுரையில், 11 ஆயிரத்து, 175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று ஒரே நாளில், 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களையும் சேர்த்து, இதுவரை, ஒரு லட்சத்து, 90 ஆயிரத்து, 966 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நேற்று வரை, 4,034 பேர் இறந்துள்ளனர். சென்னையில் மட்டும், 2,140 பேர் இறந்துள்ளனர். நேற்று தனியார் மருத்துவமனையில், 22 பேர்; அரசு மருத்துவமனையில், 77 பேர் என மொத்தம், 99 பேர் இறந்துள்ளனர். மேலும், 56 ஆயிரத்து, 738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்:மாவட்டம் - பாதிப்பு - குணம் அடைந்தோர் - இறப்புஅரியலுார் 950 -772 - 7செங்கல்பட்டு 14,866 - 11,564 - 253சென்னை - 1,00,877 - 86,301 - 2,140கோவை - 5,059 - 3,245 - 64கடலுார் - 3,271 - 1,913 - 34தர்மபுரி - 770 - 502 - 4திண்டுக்கல் - 2,893 - 2,191 - 53ஈரோடு - 732 - 551 - 9கள்ளக்குறிச்சி -3,807 - 2,743 - 25காஞ்சிபுரம் - 9,384 5,918 - 112கன்னியாகுமரி - 4,891 - 2,838- 45கரூர் - 532 - 276 - 9கிருஷ்ணகிரி - 1,042 - 548 - 14மதுரை - 11,175 - 8,631 - 247நாகப்பட்டினம் - 772 - 444 - 8நாமக்கல் - 728 - 390 - 6நீலகிரி 802 -650 - 2பெரம்பலுார் -497 - 301 - 3புதுக்கோட்டை - 2,258 - 1,375 - 25ராமநாதபுரம் - 3,293 - 2,643 - 66ராணிப்பேட்டை - 5,300 - 3,492 - 33சேலம் - 3,670 - 2,545 - 33சிவகங்கை - 2,426 - 1,957- 43தென்காசி- 2,210- 1,173 - 23தஞ்சாவூர் - 2,915 - 1,894 - 28தேனி- 5,355 - 3,085 - 63திருப்பத்துார் - 1,167 - 725 - 16திருவள்ளூர் - 14,128 - 10,370- 246திருவண்ணாமலை - 6,304 - 4,153 - 62திருவாரூர் - 1,738 - 1,181 - 9துாத்துக்குடி - 7,350 - 5,183 - 48திருநெல்வேலி- 5,393 - 3,068 - 44திருப்பூர் - 909 - 581 - 11திருச்சி - 4,282 - 2,651 - 60வேலுார் - 6,069 - 4,617 - 63விழுப்புரம் - 3,923 - 2,902 - 35விருதுநகர் - 8,151 - 6,041 - 90வெளிநாட்டில் இருந்து வந்தோர் 821 - 676 - 1உள்நாட்டு விமான பயணியர் 603 - 452 - 0ரயில் பயணியர் 425 - 424 - 0மொத்தம் 2,51,738 - 1,90,966 - 4,034***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X