சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரங்கள் வெட்டி சாய்ப்பு: பசுமை ஆர்வலர்கள் அதிர்ச்சி

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 மரங்கள் வெட்டி சாய்ப்பு: பசுமை ஆர்வலர்கள் அதிர்ச்சி

திருப்பூர்:திருப்பூர், குமரானந்தபுரத்தில், மின் கம்பியில் உரசுவதாக கூறி, இரண்டு மரங்களை அடியோடு வெட்டி அகற்றியதால், அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர், குமரானந்தபுரம் ஸ்கூல் வீதியில், தனியார் வீட்டின் முன் இருந்த மரங்கள், மின்கம்பங்கள் உரசும் அளவுக்கு வளர்ந்திருந்தன. மின் பணியாளர்கள், மரக்கிளைகளை அகற்றுமாறு தெரிவித்துள்ளனர். ஆனால், மரங்கள் அடியோடு வெட்டி அகற்றப்பட்டதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அப்பகுதியினர் கூறுகையில், 'மின்வாரிய அதிகாரிகள் கூறியதாக கூறி, வளர்ந்த மரங்களை அடியோடு வெட்டி அகற்றியுள்ளனர். இதுதவிர, கட்டடத்தில் உரசுவதாக கூறி, மற்றொரு பெரிய மரத்தையும் அடியோடு வெட்டி அகற்றியுள்ளனர். வருவாய்த்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.திருப்பூர் வடக்கு தாசில்தார் பாபு கூறுகையில், ''வாதநாராயண மரத்தை ஒருவர் வெட்டி, அகற்றியதாக மக்கள் புகார் செய்தனர். வருவாய் ஆய்வாளர் நேரில் ஆய்வு செய்து, அபராதம் விதித்துள்ளோம். பசுமையான மரங்களை வெட்டினால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X