பொது செய்தி

தமிழ்நாடு

கோவை நகர் பள்ளிகள் பிளஸ் 1 தேர்வில் அசத்தல்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கோவை:பிளஸ் 1 ரிசல்ட்டில், கோவை மாவட்டத்தில் உள்ள, நான்கு கல்வி மாவட்டங்களை ஒப்பிடுகையில், நகர்ப்புற பள்ளிகளே, 98.79 சதவீத தேர்ச்சியுடன் முன்னிலையில் உள்ளன.பள்ளிக்கல்வித்துறை சீர்த்திருத்த நடவடிக்கை அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளின் அடிப்படையில், கல்வி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.கோவை வருவாய் மாவட்டத்தில், பொள்ளாச்சி, கோவை நகர், எஸ்.எஸ்.குளம் மற்றும் பேரூர் என நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. மாவட்ட கல்வி அலுவலர்களின் கீழ், இக்கல்வி மாவட்ட பள்ளிகளின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.பிளஸ் 1 ரிசல்ட் வெளியான நிலையில், மாநிலத்தில் முதல் ரேங்க் பெற்ற கோவை மாவட்டத்தின், கல்வி மாவட்ட வாரியாக ரிசல்ட் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில், நகர்புறப்பள்ளி மாணவர்களே, அதிக தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவையில் உள்ள நான்கு கல்வி மாவட்டங்களில், நகர்ப்புற பள்ளிகள் அதிக தேர்ச்சி சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது. கடந்தாண்டை விட, பொள்ளாச்சி கல்வி மாவட்டம் மட்டும், 0.54 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளது. எனவே, பள்ளி வாரியாக தேர்ச்சி, தோல்வி சதவீதம் கணக்கிட்டு, காரணம் ஆய்வு செய்ய, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X