தமிழ்நாடு

புகார்: காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் குறைவான நீர் வினியோகம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement
புகார்: காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் குறைவான நீர் வினியோகம்

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க காவிரி கூட்டு குடிநீர் திட்டம் 2009 முதல் செயல்படுகிறது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை நகராட்சிகள், பேரூராட்சி உட்பட அனைத்து கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக குழாய் மூலம் வினியோகம் செய்கின்றனர்.

தற்போது காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் குறைவான நீர் வினியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கிராமப்புறங்களில் பெயரளவில் மட்டுமே வினியோகம் செய்கின்றனர். போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் ஒரு குடம் ரூ.6 முதல் ரூ.12க்கு விலைக்கு வாங்கியும், கண்மாய் உறை கிணறுகளில் தண்ணீர் எடுத்து சிரமப்படுகின்றனர். குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குலுக்கல்முறையில் குடிநீர்



லாந்தை ஊராட்சி கருங்குளம் பகுதியைச் சேர்ந்த லதா, மங்களம் கூறுகையில், 'போதிய குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகிறோம். பனைக்குளத்திலிருந்து காவிரி கூட்டுகுடிநீர் ஒருநாள் அல்லது இரு நாட்களுக்கு ஒரு முறை 2மணிநேரம் வருகிறது. 300 வீடுகள் உள்ளன, எங்களுக்குள் குடிநீர் பிடிக்கும்போது ஏற்படும் தகராறை தவிர்க்க 10பேர் வீதம் சீட்டில் பெயர்களை எழுதி குலுக்கல் முறையில் தேர்வு செய்து குடிநீர் பிடிக்க முன்னுரிமை அளிக்கிறோம். ஊரில் மேல்நிலைத் தொட்டி கட்டி அப்படியே விட்டுள்ளனர்,' என்றார்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X