பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு

அன்னூர்:அன்னூர் ஒன்றிய அலுவலகத்தில், 4.50 லட்சம் ரூபாயில், புதிய போர்வெல் போடப்பட்டு, குடிநீர் பணிகள் செய்யப்படுகிறது.அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பல்வேறு பிரிவுகளில் நிரந்தர, தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த ஊழியர்கள், 60 பேர் பணியாற்றுகின்றனர். அலுவலக வளாகத்தில், ஊழியர் குடியிருப்பும் உள்ளது.வளாகத்தில் உள்ள போர்வெல், நீர் இல்லாமல் வறண்டது. புதிதாக போர்வெல் போட்டு, குடிநீர் குழாய் அமைக்க, 4.50 லட்சம் ரூபாய் ஒன்றிய பொது நிதியில் ஒதுக்கப்பட்டது.நேற்றுமுன்தினம், புதிய போர் போடப்பட்டது. 850 அடியில், 3 இன்ச் அளவு தண்ணீர் வந்தது. இதனால் அலுவலர்கள், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குழாய் பதிக்கும் பணி வேகமாக நடக்கிறது. 'ஓரிரு நாட்களில், மேல்நிலை தொட்டிக்கு இணைப்பு தரப்பட்டு, குடிநீர் சப்ளை துவங்கும்' என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X