மக்கள் விரும்பினால் கொரோனா பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் விரும்பினால் கொரோனா பரிசோதனை

Added : ஆக 02, 2020
Share
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் விரும்பினால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 2 ஆயிரம்படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. பழைய அரசு மருத்துவமனை வளாகம் புதுப்பிக்கப்பட்டு அங்கும் கொரோனா பாதிப்புள்ளவர்கள் தங்க அனுமதிக்கப்பட்டு

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் விரும்பினால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 2 ஆயிரம்படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. பழைய அரசு மருத்துவமனை வளாகம் புதுப்பிக்கப்பட்டு அங்கும் கொரோனா பாதிப்புள்ளவர்கள் தங்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர தனியார் கல்லுாரியிலும் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுஉள்ளது. தினமும் ஆயிரம் பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தினமும் 60 முதல் 70 பேர் வரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மக்கள் நலனுக்காக 12 ஒன்றியங்களில் கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு காய்ச்சல், சளி, மூச்சுதிணறல் உள்ளவர்கள்பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

கொரோனா தொற்று குறித்து அச்சப்படுபவர்கள்விரும்பினால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம். மாவட்டத்தில் 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று குறித்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X