பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் - பழங்குடியினர் நல்லுறவுக்கு புது முயற்சி

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 போலீஸ் - பழங்குடியினர்  நல்லுறவுக்கு புது முயற்சி

பெ.நா.பாளையம்:நக்சல் தடுப்புக்காக, போலீஸ் பழங்குடியினர் நல்லுறவை மேம்படுத்த, பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை அருகில் உள்ள மாங்குழி கிராமத்தில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார், பழங்குடியினருக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜ், தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், எஸ்.ஐ., செல்வநாயகம் மற்றும் போலீசார், மாங்குழியில் வசிக்கும் பழங்குடியினருக்கு இலவசமாக வேட்டி, சேலை, இனிப்புகள் வழங்கினர்.நிகழ்ச்சியின்போது, மலை கிராமங்களில் சந்தேகப்படும் வகையில், நடமாடும் நபர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு, பழங்குடியினருக்கு, போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X