திருப்பூரில் 26 பேர் டிஸ்சார்ஜ்: இதுவரை குணமடைந்தோர் 581 பேர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் 26 பேர் டிஸ்சார்ஜ்: இதுவரை குணமடைந்தோர் 581 பேர்

Added : ஆக 02, 2020
Share

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 36 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது; நேற்று, 'டிஸ்சார்ஜ்' ஆன, 26 பேர் உட்பட, 581 பேர் குணமடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா தொற்று, 873 ஆக இருந்த நிலையில், நேற்று, 36 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொமரலிங்கம் பேரூராட்சி செயல் அலுவலர், வெளிமாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு மாற்றலாகி வந்த அவருக்கு, தொற்று உறுதியாகியுள்ளது.மாநகராட்சியில், 54 வயதுள்ள தற்காலிக சுகாதார பணியாளர், திருப்பூரில் பணிபுரியும் பீஹாரை சேர்ந்த, 22 வயது தொழிலாளி; 31 வயது குழந்தைகள் நல டாக்டர் உட்பட, 36 பேருக்கு, தொற்று உறுதியாகியுள்ளது. திருப்பூரை சேர்ந்த, ஐந்து வயது சிறுவன் உட்பட, 24 ஆண்கள்; 12 பெண்கள் என, 36 பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது.மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு, 909 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில், 26 பேர், நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, மொத்தம், 581 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X